தேர்தல் தோல்விக்கு ராகுல், பிரியங்கா தான் காரணம்: தேஜஸ்வி கட்சி குற்றச்சாட்டு!

திங்கள், 16 நவம்பர் 2020 (08:05 IST)
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஸ்டவசமாக 15 இடங்கள் குறைவாக பெற்றதால் அவர் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் காங்கிரஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தேர்தலை பொறுத்தவரை பாஜகவுக்கு சாதகமாகத்தான் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டதாகவும் பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 70 பொதுக்கூட்டங்களை கூட நடத்தவில்லை என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறியுள்ளது 
 
மேலும் தேர்தல் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் நேரத்தில் சிம்லாவுக்கு ராகுல்காந்தி பிக்னிக் சென்றார் என்றும் அவர் மூன்று நாட்கள் மட்டுமே பீகாரில் பிரச்சாரம் செய்தார் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூறியுள்ளது 
 
அதேபோல் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்கே வரவில்லை என்றும் காங்கிரஸின் மெத்தனத்தால் தான் பீகாரில் தங்கள் கூட்டணி தோல்வி அடைந்ததாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து என்ன பதில் கூறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்