பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக 74 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதாதளம் 43 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. இருப்பினும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமார் தான் முதலமைச்சர் என்று பாஜக கூறியுள்ளது. ஏற்கனவே பீகாரின் வளர்ச்சி பணிகள் முன்னெடுத்துச் செல்வதற்கு நிதிஷ்குமாரின் தலைமை தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி இருந்தும் முதலமைச்சர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பாஜக, அமைச்சரவையில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் முக்கிய அமைச்சர் பதவிகளை பாஜகவினருக்கு தரவேண்டும் என்றும் பாஜக கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது