துணிக்கடையில் திருடி கேமராவில் சிக்கிய நடிகை ஜெனிலியா கணவர்- வீடியோ இணைப்பு

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (11:41 IST)
ஜீன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து விஜய் நடித்த சச்சின், வேலாயுதம், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் திரையுலகில் முன்னனியில் இருக்கும்போதே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்தார். பின்னர் திரையுலகை விட்டு விலகிய அவர் மும்பையில் வசித்துவருகிறார்.


 

இந்நிலையில் ரித்தேஷ் தேஷ்முக் ஒரு கடையில் ஆடைகள் வாங்குவதற்காக சென்றவர், அங்கிருந்த சில ஆடைகளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரித்தேஷின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் ஒரு சிலரோ இது அவர் தற்போது நடித்துவரும் ஹவுஸ்புல் 3 படத்திற்கான காட்சி என்று கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ரித்தேஷ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.



 
அடுத்த கட்டுரையில்