கடந்த 2013 ஆம் ஆண்டு, மும்பை நெப்பியன்சி ரோடு பகுதியை சேர்ந்த நிக்கில் ஜவேரி, திடீரென் காணாமல் போனார். இவரை எவ்வளவு தேடியும் இவரது குடும்பத்தினரால் இவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் போலீஸாரிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரின் பேரில் தேடுதலில் இறங்கிய போலீஸார், ஜவேரியை காந்தவலி என்ற பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அப்போது அவர் நிமோனியா காய்ச்சலால் நடக்கமுடியாமல் இருந்துள்ளார்.
ஆனால் அவரின் இரண்டு மனைவிகளும் மகன்களும் அவரை சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜவேரியை மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களிலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இவரது 2 மனைவிகளும் , இரண்டாம் மனைவியின் மகன்களும், ஜவேரியின் 200 கோடி ரூபாய் சொத்தில் பங்கு கேட்டு சண்டையிட்டு வருகின்றனர். மேலும் சொத்துக்கு உரிமை கோரி அவர்கள், ஆசாத் மைதான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.