உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ பல்கலைகழகத்தில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆயுஷ் சிங். ஒருநாள் சாப்பாடு எடுத்து வராத ஆயுஷ் சிங் அதிகம் பசித்ததால் பல்கலைகழக ஹாஸ்டலுக்குள் புகுந்து மதிய உணவு சாப்பிட்டிருக்கிறார். ஹாஸ்டல் விதிமுறைகள்படி ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள் தவிர வெளியாட்கள் ஹாஸ்டலுக்குள் தங்கவோ, சாப்பிடவோ கூடாது.
ஆயுஷ் சிங் ஹாஸ்டலுக்குள் புகுந்து சாப்பிடுவதை மாணவர்கள் சிலர் வார்டனிடம் சொல்லியிருக்கிறார்கள். வார்டன் ஆயுஷை பிடித்து வெளியேற்றியிருக்கிறார். தன் செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஆயுஷ் சிங் பசித்ததால் சாப்பிட வந்ததாக சொல்லியும் வார்டன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆயுஷ் சிங்கிற்கு 20 ஆயிரம் அபராதம் விதித்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.