எனக்கு வந்த கொரோனா யாருக்கும் வர கூடாது! – தன்னை தானே சுட்டு கொண்ட தாசில்தார்!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (08:35 IST)
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு உறுதியான தாசில்தார் ஒருவர் தனது குடும்பத்தினருக்கு தொற்று பரவ கூடாது என தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சோமநாயக். ஓய்வுபெற்ற தாசில்தாரான இவர் சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு தனது விவசாய நிலத்திற்கு சென்ற சோமநாயக், தனக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று குடும்பத்தினருக்கு பரவ கூடாது என்பதால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்