கேரளாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா... கட்டுபாடுகள் நாளை முதல் அமல்!

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (09:46 IST)
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் கட்டுபாடுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட உள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.
 
இதனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவிலும் கட்டுபாடுகள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட உள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. நாளை (ஏப்.24) அரசு அலுவலங்கள், பொது துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 
2. அரசு அலுவலகங்களில் பணி நாட்களில் 50 சதவீதம் ஊழியர்கள் மட்டும் பணிக்கு செல்ல அனுமதியுண்டு.
3. ஏப்ரல் 24, 25 ல் அத்தியாவசிய கடைகள் மற்றும் காய்கறி, பழம், பால்,மீன், இறைச்சி ஆகிய கடைகள் மட்டும் திறக்கலாம். 
4. ஓட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் ஆகியவற்றில் உணவுகள் பார்சல் மட்டும் வழங்கலாம்.
5. பள்ளிகளில் ஆன் லைன் மூலம் வகுப்புகள் நடக்கும்.
6. டியூசன் மையங்கள் திறக்க அனுமதியில்லை. 
7. கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்