தமிழுக்கு வரும் உப்பென்னா கதாநாயகி… அதுவும் அவர் படத்திலா?

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:59 IST)
உப்பென்னா படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி தனுஷோடு ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தெலுங்கில் கடந்த மாதம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த படம் உப்பென்னா. அந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் கீர்த்தி ஷெட்டி. படம் ரிலீஸ் ஆனது முதல் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழில் தனுஷை வைத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்