சன் ரைசர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த யார்க்கர் கிங் நடராஜன் சிறப்பாக பந்து வீசியதால் இந்திய அணியில் இடம்பெற்று கலக்கினார். அதையடுத்து இந்த ஆண்டு அவர் மேல் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயமே காரணம் என சொல்லப்பட்டது.