உக்ரைன் அதிபர் மனைவு உள்பட உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று பயணித்த விமானம் ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விமானத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி உள்பட மொத்தமாக 23 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் டோக்கியோவுக்கு செல்லும் வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில் ஜெய்ப்பூரில் சுமார் இரண்டு மணி நேரம் தங்கிமர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், இந்த தூதுக்குழுவுக்கு விமான நிலையத்தில் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய அவர்கள், விஐபி ஓய்வறையில் இருந்தனர். அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன.
இந்த தூதுக்குழு ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவே இந்த பயணம் என்று கூறப்படுகிறது.