இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பண பரிமாற்றம் நடக்காத, நீண்ட காலமாக பூஜியம் தொகையை மட்டும் வைத்திருக்கும் வங்கி கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத அக்கவுண்டுகள் இந்த நடவடிக்கையில் அடங்கும்.
வங்கி கணக்குகள் செயல்படாமல் முடக்கப்பட்டால், அந்த கணக்குகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளை மீண்டும் செயல்பட செய்ய வங்கி கிளையில் சென்று கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர், அந்த கணக்குகள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.