ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5% இருக்கும் நிலையில், அதே வட்டி விகிதம் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.