ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (10:33 IST)
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
வங்கிகளுக்கான குறுகிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை அடுத்து தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25% என இருக்கும் நிலையில் இனி 6.50 சதவீதம் என உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு மே மாதம் 4 சதவீதம் என இருந்த வட்டி விகிதம் ஒரே ஆண்டுக்குள் 2.5% உயர்ந்து 6.5% என உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஒரு ஆண்டில் ஆறாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால் வங்கியில் இருசக்கர, நான்கு சக்கர, வீட்டு லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பது ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்