வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமா? ரிசர்வ் வங்கி ஆளுனர் தகவல்!
வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:36 IST)
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து குறுகிய கால வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளார்
இதனை அடுத்து இதுவரை குறுகிய கால வங்கி கடனுக்கு 4 சதவீதமாக பெற்றுவந்த நிலையில் அதே நிலை தொடரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு இன்றைய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்தவித மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு குறித்து பொருளாதார வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.