மேலும், ‘ரிலையன்ஸ் லைஃப் மொபைல்' மற்றும், 'சாம்சங், எல்.ஜி., பேனாசோனிக், அசுஸ்' ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களை வாங்கு வோருக்கும், 'ஜியோ 4ஜி' சிம் கார்டுகளை, இலவசமாக வழங்கி வருகிறது.
அதன் மூலமும், அனைத்து தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கும், மூன்று மாதங்கள் இலவச அழைப்பு வசதியும், இலவச இன்டர்நெட் சேவையும் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தயாரிப்பான ’லைஃப் மொபைல்’ போன் வெடித்து சிதறியதாகவும், ஆனால், தனது குடும்பத்தினர் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் தன்விர் சாதிக் என்பவர் மூன்று புகைப்படங்களுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கடுத்து, அவருடைய பதிவிற்கு ரிலையன்ஸ் லைஃப் மொபைல் நிறுவனம் பதிலளித்துள்ளது. ”இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவது தொடர்பாக விவாதித்து வருகிறோம். இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிறகு உங்களுக்கு பதிலளிக்கிறோம்; என்று தெரிவித்துள்ளது.