வெட்டி விளம்பரம் செய்த ரெஹானாவை சுற்றி வளைத்து கைது செய்த போலீஸ்: கேரளாவில் பரபரப்பு

செவ்வாய், 27 நவம்பர் 2018 (15:51 IST)
சபரிமலை விவகாரத்தில் வெட்டி விளம்பரம் செய்த ரெஹானா பாத்திமா அடுத்த மதத்தினரின் உணர்ச்சிகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அவரை போலீஸார் கைது செய்தனர்.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலுக்குள் செல்ல முற்பட்ட பெண்களை தடுத்து நிறுத்தியும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெட்டி பந்தாவிற்காகவும், வீண் விளம்பரத்திற்காகவும் எந்த விரதமும் மேற்கொள்ளாமல் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்ற பெண் சபரிமலை கோவிலுக்குள் நுழைய முற்பட்டார். கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் திரும்ப அனுப்பப்பட்டார்.
இதனையடுத்து பாத்திமா மத நம்பிக்கைகளை சீர் குலைக்கும் விதமாக நடந்துகொண்டதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் அவர் கேரள மாநில முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் பணி செய்து வந்த பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் மத நம்பிக்கைகளை சீர் குலைக்கும் விதமாகவும், அடுத்த மதத்தினரின் நம்பிக்கையை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதால் அவரை போலீஸார் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்