அதன்படி மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். 50% வரை குறைவாக இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50% முதல் 75% குறைவாக இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75% சதவீதத்திற்கும் அதிகமாக இருப்புத் தொகை இருந்தால் 100 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும்.
அதேபோல் நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சமாக 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 1,000 ரூபாயும் கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில், 10 கோடி ஜன்தன் கணக்குகளை பராமரிக்க அதிகம் செலவாகிறது. எனவே அதனை ஈடுகட்டவே குறைந்தபட்ச வைப்பு தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா விளக்கமளித்துள்ளார்.