லாக்கரையே உடைக்லாம்... ரிசர்வ் வங்கி அப்டேடட் விதிமுறைகள்!!!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:02 IST)
வங்கிகளில் கொடுக்கப்படும் லாக்கர் வசதியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. 

 
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அனைத்தும் 2022 ஜனவர் 1 முதல் அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவை பின்வருமாறு... 
 
1. வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி செய்தால் ஓராண்டு வாடகையை போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க வேண்டும். 
2. தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும்  100 மடங்கு தொகையை இழப்பீட்டை தர வேண்டும்.
3. பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்பதை ஒப்பந்தப் பத்திரத்தில் சேர்க்க வேண்டும். 
4. வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விபரங்களை வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
5. பாதுகாப்பு பெட்டகம் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். 
6. வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். 
7. இயற்கைச் சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது. 
8. பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகள் குறித்த கால வைப்பு நிதியை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.
9. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்