ஒமிக்ரானால் இந்திய பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்: ரிசர்வ் வங்கி கவலை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (15:57 IST)
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தனது கவலையை தெரிவித்துள்ளது. 
 
கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் தற்போதுதான் படிப்படியாக மீண்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டெல்லி, கேரளா, மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது என்பதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார் 
 
மேலும் வங்கியின் இருப்பு நிலை மற்றும் முதலீடுகள் பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அதேநேரம் செயல்படா சொத்துக்களின் எண்ணிக்கை 9.5 சதவீதமாக உயரும் அபாயம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்