இந்தியாவில் டிஜிட்டல் கரன்ஸி எப்போது? ஆர்பிஐ ஆளுனர் தகவல்!
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:07 IST)
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி வரும் நிதியாண்டில் வெளியிடப்படும் என்றும் இந்த டிஜிட்டல் கரன்சிகளுக்கும் தற்போது புழக்கத்தில் உள்ள கரன்சிக்கும் வித்தியாசம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான கொள்கைகளைக் கொண்டு உள்ளது என்றும் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பொருளாதாரத்திற்கும் நிதிநிலையில் நிலை தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து எச்சரித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் கிரிப்டோ கரன்சிக்கு எந்த வித மதிப்பும் இல்லை என்றும் அதில் அதிக அளவு முதலீடு செய்வதால் எந்த வைரம் பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்