கொரோனாவால் இறந்த தந்தை; தீயில் பாய்ந்த மகள்! – ராஜஸ்தானில் அதிர்ச்சி!

வியாழன், 6 மே 2021 (08:55 IST)
ராஜஸ்தானில் கொரோனாவால் இறந்த தந்தையை எரித்தபோது மகள் தீயில் பாய்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தை சேர்ந்தவர் தாமோதர்தாஸ் சர்தா. கடந்த சில நாட்களுக்கு முன்னால் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை சடங்குகள் செய்து எரியூட்டியுள்ளனர். அப்போது அவரது இளைய மகள் நெருப்பில் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனிருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் 70 சதவீத தீக்காயங்களோடு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்