கொரோனாவுக்கு பலியான பிரபல பாடகர்: அதிர்ச்சியில் திரையுலகம்

வியாழன், 6 மே 2021 (07:47 IST)
கொரோனாவுக்கு பலியான பிரபல பாடகர்: அதிர்ச்சியில் திரையுலகம்
கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரபலங்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பாடகர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா காரணமாக எஸ்பிபி, கேவி ஆனந்த், தாமிரா உள்பட ஒருசிலர் பலியான சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஆட்டோகிராப் படத்தில் ’ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் ஒரு சில வரிகளை பாடிய பாடகர் கோமகன் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஒரு சிறந்த மேடைப் பாடகர் என்பதும் ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மாற்றுத்திறனாளியான இவர் தன்னுடைய இசைத்திறமை காரணமாக புகழ் பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட கொரோனாவால் அவரது உயிர் பலியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக திரையுலகினர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்