டாஸ்மாக் கடைகள் 4 மணி நேரம் மட்டுமே! – காலையிலேயே குவிந்த மதுப்பிரியர்கள்!

வியாழன், 6 மே 2021 (08:22 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னதாக இரண்டு முறை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது முறையாக மேலதிக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அனைத்து கடைகள், தொழில்களும் செயல்பட மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அறிவிப்பில் டாஸ்மாக் கடைகளுக்கான கட்டுப்பாடு அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது வாங்க காலையிலேயே மதுப்பிரியர்கள் மதுபானக்கடை முன்பு காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்