கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு!
செவ்வாய், 17 மார்ச் 2020 (11:20 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்டிராவில் உள்ள மும்பையை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.