கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம்! அதிரடி நடவடிக்கை..!

Siva

வியாழன், 6 ஜூன் 2024 (19:43 IST)
நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு   படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சண்டிகர் விமான நிலையத்திற்கு இன்று நடிகை கங்கனா ரனாவத் வருகை தந்த போது திடீரென மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்தார். 
 
போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்ததால் அவர் கன்னத்தில் அறைந்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து கங்கனா ரனாவத் புகார் அளித்த நிலையில் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து சற்று முன் சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்பி மற்றும் நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்