பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவிகிதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. இதற்காக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசை கடுமையாக பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தியும் இன்று காலை அவ்வாறு ஒரு ட்விட்டர் பதிவை பகிர்ந்திருக்கிறார்.