சோனியா, பிரியங்கா முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த ராகுல்காந்தி.. வெற்றி கிடைக்குமா?

Mahendran
வெள்ளி, 3 மே 2024 (14:44 IST)
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சென்று ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்த போது சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் இருந்தனர். 
 
ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார் என்பதும், ஒருவேளை அவர் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றால் ரேபேலி தொகுதியை தான் ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.
 
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனிராஜா போட்டியிடும் நிலையில் அவர் வெற்றி பெற்று விடுவார் என்ற கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. அதனால்தான் இன்னொரு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி முடிவு செய்திருப்பதாகவும் அமேதி தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்ததால், ரேபேலி தொகுதியில் அவர் மாறி போட்டியிடுவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்