ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் ரத்து: என்ன நடந்தது ஜம்மு காஷ்மீரில்?

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (15:01 IST)
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார் என்பதும் அவரது நடை பயணம் காஷ்மீரில் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் கொட்டும் மழையில் ராகுல் காந்தி பனிஹால் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவ் காரணமாக கற்கள் விழுந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
 
மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக ராகுல் காந்தியின் நடை பயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாளை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் நடை பயணம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்