ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் மோடி ஊதித் தள்ளிவிடுவார்: சீமான்

புதன், 21 ஜூன் 2023 (10:16 IST)
மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் மோடி அவரை ஊதி தள்ளி விடுவார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
இன்னொருமுறை பாஜக மத்தியில் ஆட்சியில அமர்ந்தால் நாடு சுடுகாடாகிவிடும் என்று தெரிவித்த அவர் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்தார். 
 
அந்தந்த மாநில கட்சிகள் அந்தந்த மாநிலத்தில் அதிக சீட்டுகளில் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு ஐகே குஜரால், விபி சிங், தேவவுடா போன்று கூட்டாட்சி அமைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பாஜக ஆட்சி வருவதற்கு காரணமே காங்கிரஸ்தான் என்றும் பத்து ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த மோசமான ஊழல் தான் பாஜகவை மக்கள் ஆட்சியில் உட்கார வைத்தார்கள் என்றும் தெரிவித்தார். 
 
பிரதமர் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தினால் அவரை மோடி ஊதி தள்ளி விடுவார் என்றும் அவர் கூறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்