காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு! – உடலை தூக்கி சென்ற ராகுல்காந்தி!
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:58 IST)
டெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் உடலை ராகுல் காந்தி சுமந்து சென்ற சம்பவம் வைரலாகியுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராகுல் காந்தி. எனினும் காங்கிரஸ் செயல்பாடுகள் மற்றும் மக்கள் தொடர்பில் தீவிரமாக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் ராணுவ அதிகாரியுமான கேப்டன் சதீஷ் சர்மா இயற்கை எய்தினார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட ராகுல் காந்தி சதீஷ் சர்மா உடலை தோளில் சுமந்துக் கொண்டு சென்றார்