முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள்: அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுனர் விளக்கம்..!

வியாழன், 6 ஜூலை 2023 (16:40 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகள் குறித்த ஆவணங்கள் சட்ட பரிசீலனையில் உள்ளன என  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அனுப்பிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
 
அதேபோல் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள வழக்கில், விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதே நேரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பாக எந்த குறிப்பும் அல்லது கோரிக்கையும் அரசிடம் இருந்து வரவில்லை என்றும் ஆளுனர் மாளிகை தெரிவித்துள்ளது.
 
முன்னதாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுனருக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்த  கடிதத்தில் ‘ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது  என்றும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்