இந்த நிலையில் இந்தியாவில் இதுவரை 73 கோடி பேர் பான் கார்டு வைத்திருக்கும் நிலையில் மத்திய அரசு ஆதார் அட்டை போன்று பான் கார்டும் டிஜிட்டல் முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக 1435 கோடி ரூபாய் செலவில் பான் கார்டு 2 என்ற திட்டத்தை சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அதுக்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தின் படி ஆன்லைனில் பொதுமக்கள் க்யூ ஆர் கோடு பான் கார்டுகளை விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் செல்போன் எண், இமெயில் முகவரி மற்றும் புகைப்படங்களை எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் எண் கொடுத்து கைரேகை வைத்தால் க்யூ ஆர் கோடு பான் கார்டு வழங்கப்படும் என்றும் இந்த பான் கார்டு வீடு தேடி வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் என் எஸ் டி எல் மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை பான் கார்டு வாங்காதவர்கள் க்யூ ஆர் கோடு பான் கார்டு தேவை என்றாலோ, ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் பான் கார்டு 2 திட்டத்தில் இணைய வேண்டும் என்றாலோ, உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.