இந்த நிலையில் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பது குறித்த கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி என்பவர் பதில் அளித்துள்ளார். இந்த பதிலில் இன்னும் 11.48 கோடி ஆதார் கார்டுகள் பான் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்றும் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வரை சுமார் 602 கோடி ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு தாமத கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகள் தொடங்க, பர்சனல் கடன் வாங்க ஆகிய அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளை இணைக்கப்பட வேண்டியது அவசியம் என்பதால் இதுவரை இணைக்காதவர்கள் உடனே இணைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.