ஏப்ரல் 1 முதல் என்னென்ன மாற்றங்கள்? பான் கார்டு முதல் காப்பீடு பாலிசி வரை..!

Siva

ஞாயிறு, 31 மார்ச் 2024 (11:28 IST)
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில் இந்த புதிய நிதியாண்டில் சில மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
 
 
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வருமான வரி நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன. குறிப்பாக தனி நபர் பழைய வரி முறையில் வரி செலுத்தலாம்.
 
ஏப்ரல் 1  ஆயுள் காப்பீடு பாலிசிகளின் முதிர்ச்சித் தொகை மொத்த ப்ரீமியம் ரூ 5 லட்சத்தை தாண்டினால் அந்த தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.
 
 ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 1க்குள் இணைக்கவில்லை என்றால் பான்  ரத்து செய்யப்படும்.
 
சமையல் சிலிண்டர் விலையில் நாளை முதல் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டாலும் தற்போது மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் விலையில் மாற்றம் இருக்காது.
 
நாளை முதல் புதிய நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் வருகிறது.  
 
பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் ஏப்ரல் 1க்கு பிறகு வாடகையை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. 
 
ஃபாஸ்டாக் கணக்கில் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் ஏப்ரல் 1 முதல் அந்த கார்டுகள் வங்கியால் முடக்கப்படும். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்