குஜராத் மாநிலத்தில் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வயலில் மேய்ந்து கொண்டிருந்த நீல காளையை விழுங்கியது.
குஜராத் மாநிலத்தில் வனப்பகுதியில் இருந்து சுமார் 15 அடி நிளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊருக்குள் பூகுந்தது. நீல காளை என்று அழைக்கக்கூடிய ஒரு வகை மானை திடீரென விழுங்கத் தொடங்கியது.
சில மணி நேரத்துக்கு பிறகு மலைப்பாம்பு அந்த மானை முழுவதுமாக விழுங்கியது. இந்த நீல காளை என்ற வகை மான் தான் ஆசியாவிலே பெரிய மான். உணவை விழுங்கிய பின்னர் நகர முடியாமல் ஒரே இடத்தில் சிறிது நேரம் இருக்கக்கூடிய மலைப்பாம்பு, செய்வதரியாது வலது புறாமகவும், இடது புறமாகவும் புரண்டு கொண்டே இருந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்த வனத்துறையினர் மலைப் பாம்பை பிடித்து வனவிலங்கு பகுதிக்கு கொண்டு சென்றனர்.