இந்த நிலையில் திவ்யா, அபிஜித் உடன் தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்து அவரை மிரட்டி உள்ளார். இது குறித்து இருவருக்கும் சண்டை வந்த நிலையில் திவ்யாவை கொலை செய்துவிட்டு அதன் பிறகு நண்பர்களின் உதவியோடு பிணத்தை பஞ்சாபில் உள்ள கால்வாயில் வீசி உள்ளார்
அந்த பிணம் கால்வாய் வழியாக ஹரியானா மாநிலத்திற்கு வந்தபோது கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்தபோது அபிஜித் உட்பட அவரது நண்பர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை முடிவு வந்ததும் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.