ககன்யானில் 30 வகை உணவா? தடபுடலாக ரெடியாகும் விண்வெளி விருத்து...

செவ்வாய், 7 ஜனவரி 2020 (14:29 IST)
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் வீரர்களுக்கு 30-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை அனுப்ப உள்ளனராம். 
 
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. இதற்காக இந்திய விமானப்படையில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் பயிற்சி கொடுத்து பின்னர் விண்வெளிக்கு அனுப்ப உள்ளனர். 
 
இந்நிலையில், விண்வெளி செல்லும் வீரர்களுக்கு என்ன உணவுகளை வழங்க வேண்டும் என உணவு வகைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் ஆராய்ந்து வருகிறது. 
அதன்படி, சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, சுஜி அல்வா, சிக்கன் கறி, பாதாம், கீரை, பன்னீர், புலாவ், இட்லி உள்ளிட்ட 30-த்துக்கும் மேற்பட்ட உணவு வகைகளை வீரர்களுக்கு கொடுத்து அனுப்ப உள்ளனராம். இந்த மெனுவில் மாற்றங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், புவிஈர்ப்பு இல்லாததால் உணவுன்பாக்கெட்டில் இருந்து வெளியே எடுக்கும் போது தவறி போகும் வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசித்து வருகிறார்களாம். 
 
அதோடு இந்த ஆரய்ச்சி அனைத்தும் விண்வெளி செல்லும் வீரர்களை கவனத்தில் கொண்டு செய்யவில்லை, இந்திய உணவு வகைகளை மனதில் வைத்துக் கொண்டே நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்