கர்நாடகாவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:02 IST)
கர்நாடகாவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநில அரசுகள் வார இறுதிகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. அதிலும் கர்நாடகாவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழு ஊரடங்கு ஆகியவை அமல்படுத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
 
பின்னர் கொரோனா தொற்று குறைந்ததும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகளும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16 ஆம் தேதியிலிருந்து மே 6 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்