வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

சனி, 26 நவம்பர் 2022 (12:19 IST)
பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று காலை 11:56 மணிக்கு வெற்றிகரமாக கவுண்டனை நிறைவு செய்து விண்ணில் பாய்ந்து உள்ளதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். 
 
பிஎஸ்எல்வி ராக்கெட் கவுண்ட்டவுன் கடந்த 25 மணி நேரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலை 11:56 மணிக்கு சரியாக விண்ணில் பாய்ந்தது
 
960 கிலோ எடைகொண்ட இந்த ராக்கெட் புவி மற்றும் சுற்றுச் சூழலை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
விண்ணில் பாய்ந்து உள்ள ராக்கெட் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்