மேலும் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று 2.41 மணிக்கு தொடங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று செலுத்தப்படும் இந்த பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது என்றும், இந்த ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த ராக்கெட்டில் உள்ள செயற்கைக்கோள் கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மைகளுக்கு தரவுகளை பெற உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று ராக்கெட் செலுத்தப்படவுள்ள நிலையில் நேற்றே இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது