தீவிரவாதிபோல் செயல்பட்ட டிரம்ப்....ஜோ பிடனால் மகிழ்ச்சியில்லை - ஈரான் அதிபர் விமர்சனம்

புதன், 16 டிசம்பர் 2020 (21:08 IST)
தீவிரவாதிபோல் செயல்பட்ட டிரம்ப் பதவி இழந்தது மகிழ்ச்சி அளிப்பதாக ஈரான் அதிபர் ஹாசன் ரூஹாளி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வி அடையவில்லை என்றும் ஜோ பிடன் வெற்றியை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறிவந்த டொனால்ட் டிரம்ப், தற்போது தனது டுவிட்டரில் ஜோபிடனின் வெற்றியை சூசகமாக ஒப்புக் கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதன் மூலம் எதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ளத் தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் புதிய அதிபராக  ஜோ பிடன் பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், முட்டலும் மோதமுமான இருந்து வந்த அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கு இடையேயாப விவகாரத்தில் தற்போது ஈரான் நாட்டு அதிபர் ஹாசான் ரூகானி முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கடும் விமர்சனம் தெரிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவாது :

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத தீவிரவாதி போல் செயல்பட்டார். அவரது பதவிக்காலம்  முடிந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்பது கூட மகிழ்ச்சியில்லை; ஆனால், டிரம்ப் பதவி இழந்துள்ளதுதான் எங்களுக்கு மகிழ்சி உண்டாக்குகிறது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்