ஆந்திராவின் தலைநகரமான அமராவதி நகரில் நடைபெற்ற அரசு விழாவில், 58,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது:
“அமராவதி என்பது, இந்திரலோக தலைநகரத்தின் பெயர். இது தற்போது ஆந்திராவின் தலைநகரமாக இருப்பது மிகுந்த பெருமைக்குரியது. இது 'ஸ்வர்ணா ஆந்திரா' உருவாகும் புதிய ஆரம்பமாகும். அந்த கனவு, வளர்ந்த பாரதத்தை நோக்கி எங்களை இட்டுச்செல்லும்.
“நான் முதன்முறையாக குஜராத் மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சந்திரபாபு நாயுடு செயல்படுத்திய திட்டங்களை கவனித்தேன். அவரது திட்டங்கள் மூலம் நான் பல விஷயங்களை கற்று கொண்டேன். இன்று அவற்றை நேரடியாக செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் புதிய திட்டங்களும் தொடங்கப்பட்டன. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் ஒரு புதிய ஏவுகணை சோதனை தளமான "நவதுர்கா சோதனை மையம்"க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது, நாட்டின் பாதுகாப்பு வலிமையை மேம்படுத்தும் என மோடி கூறினார்.
மேலும், அமராவதி நகர மேம்பாட்டு திட்டத்திற்கும் துவக்கங்கொடுத்து, நகரத்தின் வளர்ச்சிக்கான புதிய கட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார்.