ஊழல் பள்ளியை நடத்துகிறார் மோடி.! ஊழலின் குகை பாஜக..! ராகுல்காந்தி கடும் விமர்சனம்..!!

Senthil Velan
சனி, 20 ஏப்ரல் 2024 (14:26 IST)
இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். 
 
பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் குறித்து பேசிய அவர், முழுமையான ஊழல் பாடத்தின் கீழ் நிதி, வர்த்தகம் குறித்து பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வகுப்பு எடுக்கிறார் என சாடி உள்ளார்.
 
சோதனைகளை நடத்தி எப்படி நன்கொடை வசூலிப்பது என விசாரணை அமைப்புகளுக்கு மோடி வகுப்பு எடுக்கிறார் என்றும் நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை எப்படி வழங்குவது எனவும் மோடி வகுப்பு எடுக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஊழல்வாதிகளை வாஷிங் மெஷின் மூலம் எப்படி சலவை செய்வது என்பது குறித்தும் மோடி பாடம் நடத்துகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார். பாஜக தலைவர்களுக்கு ஊழல் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஊழலின் குகையாக பாஜக மாறியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

ALSO READ: வாக்கு சதவீதம் குறைந்திருப்பது கவலை அளிக்கிறது...! தமிழிசை சௌந்தர்ராஜன்..!!
 
மோடியின் ஊழல் பள்ளியையும், ஊழல் பாடத்தையும் இந்தியா கூட்டணி மூடிவிடும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்