ஜனாதிபதியை விட அதிக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள்

திங்கள், 20 நவம்பர் 2017 (05:38 IST)
இந்தியாவின் முதல் குடிமகன் என்று கூறப்படும் ஜனாதிபதியை விட அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர். முப்படை தளபதியாக இருந்தபோதிலும், ஜனாதிபதி, கேபினட் செயலர்களை விட அவர் குறைவான சம்பளம் பெறுகிறார் என்றும் இது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.



 


ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ.1.50 லட்சம், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சம், ஆனால் 7வது ஊதியக்குழுவுக்கு பின்னர் கேபினட் செயலாளர் மற்றும் மத்திய அரசின் செயலாளர்களுக்கு ரூ.2.25 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோர்களின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பரிந்துரை கையெழுத்தானால் ஜனாதிபதிக்கு ரூ.5 லட்சமும், துணை ஜனாதிபதிக்கு ரூ.3.5 லட்சமும் சம்பளமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்