மீண்டும் தமிழகம் வரும் ஜனாதிபதி திரெளபதி முர்மு.. இம்முறை கன்னியாகுமரிக்கு விஜயம்..!

புதன், 15 மார்ச் 2023 (15:39 IST)
ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்தார் என்பதும் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட ஒரு சில இடங்களுக்கு சென்றார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு மீண்டும் தமிழக வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் திருவனந்தபுரம் வரும் ஜனாதிபதி அங்கிருந்து கன்னியாகுமாரிக்கு வருகிறார் என்றும் கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு செல்லும் அவர் அதன் பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்க்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கன்னியாகுமாரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் ஒத்திகை பார்க்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்