எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் ரூ.90 ஆயிரமாக உயர்வு: ஜனாதிபதி ஒப்புதல்

செவ்வாய், 14 மார்ச் 2023 (11:14 IST)
டெல்லி எம்எல்ஏக்களின் சம்பளத்தை 90 ஆயிரமாக உயர்த்தும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கான சம்பள உயர்வு கோரிக்கை மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அங்குள்ள எம்எல்ஏ களுக்கு 66% சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
தற்போது டெல்லி எம்.எல்.ஏக்கள் ரூ.54000 மாத சம்பளமாக பெற்று வரும் நிலையில் இனி 90 ஆயிரம் சம்பளம் பெறுவார்கள் என்பதும் அது மட்டும் இன்றி இதர படிகள் மற்றும் பலன்கள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
டெல்லி அமைச்சர்கள் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர்களுக்கு அதிகபட்சமாக 1.7 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்