சாலையில் நடந்து சென்றபோது வந்த பிரசவ வலி.. தக்க நேரத்தில் உதவிய செவிலியர்கள்..!

Mahendran
வியாழன், 29 பிப்ரவரி 2024 (11:33 IST)
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி வந்ததை அடுத்து அவருக்கு செவிலியர்கள் இருவர் சாலையில் பிரசவம் பார்த்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா என்ற பகுதியைச் சேர்ந்த ரோஷினி என்பவர் நிறைமாத கர்ப்பமாக இருந்த  நிலையில் அவர் தனது கணவருடன் சாலையில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி வந்த நிலையில் உடனே அவரது கணவர் தனது மனைவியை மருத்துவமனையில் சேர்க்க உதவுமாறு அந்த வழியாக சென்றவர்களிடம்  கெஞ்சினார். அப்போது அந்த வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்த செவிலியர்கள் இருவர் உடனே அந்த பெண்ணுக்கு சாலையில் பிரசவம் பார்த்தனர்

சாலையில் அந்த பெண்ணை சுற்றி துணிகளை வைத்து இரு செவிலியர்கள் பிரசவம் பார்த்த நிலையில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்ததாகவும் இதனை அடுத்து தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் நலமாக இருப்பதாகவும் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் சாலையில் பிரசவம் பார்த்து கர்ப்பிணி பெண்ணின் உயிரை காப்பாற்றிய தேவி மற்றும் ஜோதி ஆகிய இரண்டு செவிலியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்