காந்தி பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்.. பீகாரில் தனித்து போட்டி என தகவல்..!

Siva

திங்கள், 29 ஜூலை 2024 (08:38 IST)
தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாளில் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுவது பீகார் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை செய்யும் நிறுவனத்தை வைத்து உள்ளார் என்பதும் திமுக உள்பட பல அரசியல் கட்சியின் வெற்றிக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் குறித்த கருத்துக்களை பரபரப்பாக தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது நேரடி அரசியலில் குதிக்க இருப்பதாகவும். வரும் பீகார் சட்டமன்ற தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற அமைப்பை நடத்தி வரும் முறையில் தற்போது இந்த அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாகவும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாளில் தனது அரசியல் கட்சியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பீகார் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட பிரசாந்த் கிஷோர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்