இந்தியாவுக்கான யுத்தம் 2024 தேர்தல்: பிரசாந்த் கிஷோர்

வெள்ளி, 11 மார்ச் 2022 (12:42 IST)
இந்தியாவுக்கான யுத்தம் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நடைபெற உள்ளது என்றும் 2022ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றியை வைத்து எதையும் கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
அரசியல் கட்சிகளை வெற்றி பெற வைக்க ஆலோசனை கூறும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர், 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார் 
 
இந்த நிலையில் 2022 ல் நடந்த 5 மாநில தேர்தல் வெற்றி குறித்து அவர் கூறியபோது இந்தியாவுக்கான யுத்தம் 2024ஆம் ஆண்டில் மட்டுமே நடத்தப்பட்டு முடிவு ஏற்படுமே தவிர தற்போது நடைபெற்ற மாநில தேர்தல் அல்ல என்று கூறினார் 
 
பிரதமர் மோடிக்கு இது நன்றாக தெரியும் என்றும் இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகளை வைத்து உளவு ரீதியிலான ஆதாயத்தை மேற்கொள்ள புத்திசாலித்தனமான முயற்சி தான் இது என்றும் அவர் கூறினார்
 
இந்த தவறான கருத்துக்கு யாரும் உடன் பட வேண்டாம் என்றும் 2024 தேர்தலில் கண்டிப்பாக மோடியை வீழ்த்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்