உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 273 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு பெரும் போட்டியாக விளங்கிய சமாஜ்வாடி கட்சி கூட்டணி 111 இடங்களை கைப்பற்றியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்முறையாக தேர்தலில் களம் இறங்கிய அசாசுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஒரு சதவீத வாக்குகளை கூட பெறாமல் தோல்வியை தழுவியது. இதுகுறித்து பேசியுள்ள ஓவைசி “உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. உத்தர பிரதேச மக்கள் பாஜகவிற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அவர்கள் முடிவிற்கு மதிப்பளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.